பக்தர்கள் கடவுளுக்கு வழங்கிய நகைகளை உருக்குவது பக்தர்களின் இறை நம்பிக்கையை புண்படுத்தும், இந்து முன்னணியினர் கருத்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்குவது கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய பகுதிகளில் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார், நகர செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார், நகர செயலாளர் கோகுல், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆகியோர் பேசினர் இதில் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி, பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் ராஜேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செல்வம், மாவட்டச் செயலாளர் அரவை பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மாரிமுத்து அரசு தொடர்பு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் தீனதயாள் மற்றும் கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக நகரச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். மேலும் கடவுளுக்கு சொந்தமான நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில...