விஜய் திவஸ் பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாட முன்னாள் ராணுவ வீரர்கள் தீர்மானம்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க ஆலோசகர் சகாதேவன் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சந்திரன், கே.ரவி, கொங்கராம்பட்டு ஊராட்சி தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ரவி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சங்க தலைவர் கேப்டன் லோகநாதன் பேசியதாவது:- பங்களாதேஷ் உருவாக காராணமாயிருந்த 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த போரில் 94ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தது இன்று வரை சரித்திர சாதனையாக போற்றப்படுகிறது.
இந்த வெற்றி வருடந்தோறும் விஜய் திவஸ் என கொண்டாடபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொன்விழா ஆண்டு என்பதால் சிறப்பாக கொண்டாட நம் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி போரில் பங்கேற்ற வீரர்கள், வீரமரணமடைந்த வீரர்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு மரியாதை செய்யவும், மாவட்ட ஆட்சியரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 1971ல் போரில் பங்குபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகள் நம் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளவும், அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் எனவும், கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கண்ணமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக கண்ணமங்கலத்தில், ராணுவ மருத்துவ கிளினிக், சிஎஸ்டி கேண்டீன், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நலச்சங்க அலுவலகம் உள்ளிட்டவை கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முடிவில் துணைத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment