திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில BMS உடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க வேண்டி தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட BMS ல் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் மலர்கொடி,
மாநில இணை பொது செயலாளர் சந்திரகலா, மாநில பொருளாளர் பரிமளா, மாவட்ட செயல் தலைவர் ஜெயபால், மாவட்டத் தலைவர் காயத்ரி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.





Comments
Post a Comment