திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.
தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Comments
Post a Comment