எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார்.
இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு கயிறு கட்டி ஆபத்தான முறையில் பாலத்தின் அருகில் இருந்து காளியம்மன் கோவில் தெருவுக்கு ஆபத்தான முறையில் காயங்கள் ஏற்பட்டு சென்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதங்களை எடுத்து செல்வதற்கு கூட மயான பாதைக்கு செல்வதற்கான பாதை சரியாக இல்லாததால் தற்போது இந்த 50 குடும்பத்தினரும் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
திமுக பிரமுகரின் தூண்டுதலால் பொதுமக்களுக்கு சாலை அமைத்து தர சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டும் பொது பாதைக்கு அருகே உள்ளவர் அந்த பாதையை மூடி உள்ள சம்பவம் 50 குடும்ப கிராம மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கு 2 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவல நிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் பட்டாவை ரத்து செய்து வீடுகளை இடிப்போம் என்று வீடு வீடாக சென்று கிராம மக்களை சட்டத்திற்கு புறம்பான முறையில் அச்சுறுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் இந்த பொது பாதையை திறக்காவிட்டால் மக்களை அணி திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







Comments
Post a Comment