இல்லம் செல்வம் உள்ளம் வெல்வோம் ஆலோசனைக் கூட்டத்திற்கு பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியின் மூலம் மத்திய பாஜக அரசின் சாதனை திட்டங்களை பாரதீய ஜனாத கட்சி தொண்டர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில துனைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் இல்லம் செல்வம் உள்ளம் வெல்வோம் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கான ஆலோசனைக்கூட்டமாக திருவண்ணாமலையில் நடைபெற்றது.
பாரதீய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துனைத்தலைவர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அப்போது பேசிய கருப்பு முருகானந்தம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேரவேண்டும்.
அதற்காக பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள 25 இல்லம் சென்று அவர்களின் உள்ளங்களை வெல்ல வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் , மாவட்ட பார்வையாளர் அருள் , நிகழ்ச்சியின் கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார், சேகர், மாவட்ட பாஜக மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன், நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளர் சிவசங்கரன் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி பொருளாளர் மாலதி உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment