பாஜக விழுப்புரம் பெருங்கோட்டத்தை சேர்ந்த எஸ்.சி அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் பெருங்கோட்டத்தை சேர்ந்த 12 மாவட்ட எஸ்.சி அணி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் N.L.நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக எஸ்.சி அணி மாநில பொறுப்பாளர் டாக்டர் வெங்கடேஷ் மௌரியா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக மாநில எஸ்.சி அணி துணைத் தலைவர் சண்முகபிரியன், மாநில துணைத்தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரகு, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எஸ்.சி அணி மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொதுச்செயலாளர் விஜயராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் பாக்கியராஜ், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வருகின்ற நவம்பர் மாதம் 26 தேதி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றிய நாளை பட்டியலின மக்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.
Comments
Post a Comment