80% தடுப்பூசி போடப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மலமஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கோவிந்தராஜ்.
தலைமை ஆசிரியர் ரவி, செவிலியர் உஷா, ஊராட்சி செயலாளர் ராமன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், கூட்டுறவு விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 80 சதவிகிதம் தடுப்பூசி மலமஞ்சனூர் ஊராட்சியில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டி பிரதமர் மோடி அவர்கள் செவிலியர்களுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையை ஊராட்சிமன்ற தலைவர் சுதா கோவிந்தராஜ் அவர்கள் செவிலியர் உஷா அவர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இன்றைய தடுப்பூசி முகாமில் மொத்தம் 120 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்குடன் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, மதியம் 2 மணி வரை 96 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி முகாம் 7 மணி வரை நடைபெறும்.
Comments
Post a Comment