பிரதமரை கொலைகாரன் என்று பேசிய வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 13ஆம் தேதி நியூஸ் 18 தொலைக்காட்சி காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு பாரதப்பிரதமர் பற்றி அவதூறான முறையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக கொலைகாரன் என்றும், திருடன் என்றும் ஒருமையில் பேசி அவமரியாதை செய்து உள்ளார்.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை மரியாதை குறைவாக ஒருமையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமரை அவதூறாகப் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், மத மோதல்களை தூண்டும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பேசி மரியாதைக்குரிய நாட்டின் பிரதமர் மீது வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பொறுப்பற்ற முறையில் நாட்டின் பிரதமர் மீது அவதுறு பேசிய வன்னியரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னியரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் சரவணகுமார் தலைமையில், துணைத்தலைவர் மோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், கண்ணிகுமார், அரவிந்தன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
Comments
Post a Comment