வேளாண் அலுவலகம் முன்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாத சூழலில் தற்போது கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் யூரியா தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வேளாண் அலுவலகத்தில் யூரியா கிடைக்காததால் தனியார் கடைகளை நாடவேண்டிய சூழல் உள்ளது.
தனியார் கடைகளில் யூரியா வாங்கினால் குருணை போன்ற இடுபொருள்கள் கூடுதலாக வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படும் என கட்டுப்பாடு விதிப்பதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர்.
யூரியா விலை ரூ.300 என்றால் வியாபாரிகள் கொடுக்கும் கூடுதல் பொருட்களின் விலை 1000 த்தை தாண்டுவதாக உள்ளதால் நடவு செய்த பயிரைக் காப்பாற்றுவது எப்படி என விழிபிதுங்கி நிற்கின்றனர் விவசாயிகள்.
எனவே வேளாண் அலுவலகம் மூலம் யூரியா வழங்குவதற்க்கும் தனியார் கடைகளில் யூரியா பதுக்கலை தடுக்க அரசு வழிவகை செய்யவேண்டும் என வேளாண் அலுவலகம் முன்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments
Post a Comment