முன் களப் பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை, பாஜக மருத்துவ அணித் தலைவர் ராஜா ஹரிகோவிந்தன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
பாஜக மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் முன்னிலையில் முன் களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் நல்லாட்சியில் உலகின் முதல் முறையாக 100 கோடி கரோனா தடுப்பூசி இலவசமாக மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் மக்களை நோய் பிடியில் இருந்து காத்த காவல் தெய்வம் மகான் நரேந்திர மோடி அவர்கள் நன்றி தெரிவித்து இதற்காக அரும்பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்கள் தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் முன்னிலையில் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் தங்கவேல், பிச்சாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்தோஷ், நகர மருத்துவர் அணி தலைவர் மருத்துவர் ராஜேஷ், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் பழனி, செயலாளர் மணிகண்டன், மகளிர் அணி மெட்டில் ராணி, செயலாளர் சந்திரா மற்றும் ஏராளமான பாஜகவினர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment