காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு 120 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், இ.கா.ப., அவர்கள் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S.ராஜகாளிஷ்வரன் , மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.S.வெள்ளைத்துரை, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரன் சுருதி,இ.கா.ப, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் .D.குமார் , மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் M.சீனிவாசன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Comments
Post a Comment