இந்து கோவில்களில் தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு ஆன்மீக பக்தர்கள் ஆலயத்திற்கு தானமாக வழங்கிய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து இந்து முன்னணியின் தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்ட பொதுச் செயலாளர் அருன்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் கௌதம், சிவா, ஒன்றியச் செயலாளர்கள் விஜயராஜ், சரவணன், ராமகிருஷ்ணன், காண்டீபன், பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், நகர தலைவர் செந்தில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கோயில் நகைகளை உருக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் ராஜகோபுரம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இறுதியில் ஒன்றிய செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments
Post a Comment