திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள சந்தோஷ் மொபைல் ஷாப் உடைக்கப்பட்டு, செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை, காவல் துறை விசாரணை
திருவண்ணாமலை நகரம், அவலூர்பேட்டை ரோடு சத்யா பெட்ரோல் பங்க் எதிரில் ரமேஷ் என்பவர் சத்யா மொபைல் ஷாப் சுமார் 5 ஆண்டுகாலமாக நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் காலையில் கடையை திறக்க வரும்போது கடை உடைக்கப்பட்டு கடையில் உள்ளே இருந்த அனைத்து மொபைல், பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.
சுமார் ரூ. 50 ஆயிரம் மேற்பட்ட பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மொபைல் போன் கடை உரிமையாளர் ரமேஷ் மற்றும் பிஜேபி அறிவு சார் பிரிவு மாவட்ட தலைவர் அருணகிரிநாதன் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment