3500 க்கும் மேற்பட்ட கல்லூரி ஊழியர்களின் கோரிக்கைகள் 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் முதல்வருக்கு கோரிக்கை
உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தவிப்பு,முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?
அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 16 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத மற்றும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என 3500 மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகள் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் தவிப்பாக தவிக்கின்றனர் என்றும் இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் மதுரை, திருநெல்வேலி, திண்டிவனம், திண்டுக்கல், ஆரணி, விழுப்புரம், பண்ருட்டி, நாகர்கோவில், தூத்துக்குடி ராமநாதபுரம், உள்பட 16 உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என 3500.க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர், பணியாளர்கள் மற்றும் அலுவல ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்து வருவதாகவும், இதில் 6-வது ஊதிய குழு படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஏழாவது ஊதிய குழு படி ஊதியம் வழங்காமல் இருப்பதும், 10 ஆண்டுகாலம் ஒரே பதவியில் இருந்து வரும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊழியர்களுக்கு தேர்வுநிலை வழங்கப்படவில்லையாம்.வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்து வருவதாகவும், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டு காலமாக உறுப்பு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அலுவல ஊழியர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரிக்கை உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை அண்ணா பல்கலைக்கழகத்தில் முறையிட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தி வரும் அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக முதல்வரும், உயர் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென உறுப்பு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அலுவல ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment