அனாமதேயத்தின் கடவுள் ' லார்ட் ஜெ' என்ற பாப் இசைப் பாடகர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தனது அறிமுக விழாவை நடத்தினார்.
மலைகளெல்லாம் சிவவடிவம் என்பார்கள்.அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறையும் சிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டுபவர். அவரது பக்தராக விளங்கும் உலக அளவில் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ஒருவர் தனது அறிமுகவிழாவை திருவண்ணாமலையில் நடத்த முடிவு செய்தார்.
அதன்படி அனாமதேயத்தின் கடவுள் ' லார்ட் ஜெ' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த பாப் இசைப் பாடகர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சடைசாமி ஆசிரமத்தின் முன்பு தனது அறிமுகவிழாவை இன்று நடத்தினார். இதனை முன்னிட்டு பாப் இசைப் பாடகர் படம் இடம் பெற்ற பேனர்களுக்கு முன்பு பட்டாசு வெடித்து மலர்தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் 300 சாமியார்களுக்கு அன்னதானம் மற்றும் தட்சணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சடைசாமி ஆசிரம ஆதீனம் திருப்பாத சுவாமிகள், சுவாமி நிர்மலானந்தா, ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துக்கிருஷ்ணன், அட்சயபாபா தியானசபை அறங்காவலர் சுவாமி சாயி ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாப் இசைப் பாடகர் அனாமதேயத்தின் கடவுள் 'லார்ட் ஜெ' தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சனாக புகழ்பெற்று அவரது லட்சியத்தில் வெற்றி பெற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போல் உலக மக்கள் பாராட்டை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினர்.
உலக முன்னணி பாப் இசை பாடகராக விளங்கும் இந்த வாலிபர் தமிழகத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோரான நடராஜன்- சிவகாமசுந்தரி ஆகியோர் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இந்த பாப் இசைப் பாடகர் நாளைய பாப் இசை உலகின் நாயகராக வலம்வர வாழ்த்துவோம்.
Comments
Post a Comment