Skip to main content

Posts

Showing posts from August, 2025

அமைப்புசாரா ஓட்டுநர்கள் அரசு நலத்திட்ட உதவி பெற தங்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் முகாம்

  திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் எதிரில் உள்ளஅமைப்புசாரா ஓட்டுநர்கள் அரசு நலத்திட்ட உதவி பெற தங்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் முகாம் மாநகராட்சி மைதான திடலில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி நிலையத்தில் அனைத்து விதமான ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான படிவம் பெறுவதற்கான முகாம் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணை அமைப்பாளர் இரா.அர்ஜுனன், நகர தலைவர் தா.தட்சிணாமூர்த்தி, தொழிலாளர் நல உதவி கணக்கு அலுவலர் பி.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சமூக பாதுகாப்பு திட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையாளர் திருமதி R.வேதநாயகி அவர்கள் முகாமை தொடக்கி வைத்து படிவத்தை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டார். தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து விதமான ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து தமிழ்நாடு அரசு சார்பில் கணக்கெடுப்பு நடத்தி அனுப்பி நலத்திட்டங்கள் பெற்றிட வழி செய்யும் முகாமாக இந்த முகம்...

ஸ்ரீ விஜய் ஸ்போர்ட்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா

  திருவண்ணாமலை வேங்கிக்கால் வேலூர் சாலையில் புதிதாக ஸ்ரீ விஜய் ஸ்போர்ட்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ் இரண்டாவது கிளை திறப்பு விழா வெகு விமரிசியாக நடைபெற்றது.  ஸ்ரீ விஜய் ஸ்போர்ட்ஸ் அண்ட் கார்மெண்ட்ஸ் கிளையின் உரிமையாளர், முன்னாள் ராணுவ வீரர் ஜி.அண்ணாமலை, ஏ.மனோன்மணி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஏ.கணேஷ்பாபு,  ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சி.ஆதிசேஷன், ஜீவா வேலு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் 2வது கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி.சண்முகப்பிரியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு விற்பனையை துவக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

லான்சன் டொயோட்டாவின் பிரம்மாண்ட ஷோரூமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

  திருவண்ணாமலை நொச்சிமலை பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள லான்சன் டொயோட்டாவின் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரை தமிழக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் லங்கா லிங்கம், கூடுதல் இயக்குனர் சிவங்கா லங்கா லிங்கம், நிர்வாக இயக்குனர் திருமதி விஜயலட்சுமி சிவங்கா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி ராஜ்குமார் சிங் முன்னிலையில் பிரம்மாண்டமான ஷோரூம் திறந்து வைக்கப்பட்டது.   திருவண்ணாமலை லான்சன் டொயோட்டா கிளையின் ஊழியர்கள் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் புதிதாக வாகனத்தை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சாவி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்த 5 வயது சிறுமி ஸ்ரீதன்யா வினோத் மற்றும் S.தாருணிகாஸ்ரீ

  கடலூரில் உள்ள கோபால்  செட்டியார் திருமண மண்டபத்தில் நோபல் வோல்ட் ரெக்கார்ட் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம், யோகா, பரதநாட்டியம், கராத்தே மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் பரதநாட்டிய மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை  மாவட்டத்தை சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமியை சேர்ந்த   10க்கும் மேற்பட்ட சிலம்பம் மாணவர்கள் கலந்து கொண்டனர் . இதில் ஸ்ரீதன்யா வினோத் (5 வயது),  S.தாருணிகாஸ்ரீ ஆகிய இரு மாணவிகளும் சிறப்பாக தொடர்ந்து 45 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர்.  தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த ஸ்ரீதன்யா வினோத் (5 வயது), S.தாருணிகாஸ்ரீ ஆகிய இருவரும் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தனர் .  இவர்கள்  இருவரையும் பாராட்டி ...

ஆன்மிக நகரில் பாரம்பரிய வெஷ்டி பிராண்டின் விரிவாக்கம் – மினிஸ்டர் ஒயிட் 51வது ஷோரூம்

   பாரம்பரிய வெஷ்டிகளை நவீன வடிவமைப்பில் வழங்கி வரும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனம், தனது 51வது பிரத்யேக ஷோரூமை இன்று திருவண்ணாமலை நகரில் திறந்து வைத்தது. சின்னக்கடை வீதியில், மாவட்ட வன அலுவலகம் எதிரில், அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள புதிய ஷோரூமை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டி.வி.எஸ். இராசாரம் திறந்து வைத்தார். ஹோட்டல் ஹிமாலயா மேலாண்மை இயக்குனர் ஆர். முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை பி. கார்த்திவேல்மாறன் மற்றும் டி. ராஜேஷ் தொடங்கி வைத்தனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) போத்திராஜ் பேசுகையில்:  “ஆன்மிகமும் பாரம்பரியமும் இணைந்த திருவண்ணாமலையில், வெஷ்டி–சட்டை அணிவது வாழ்வின் ஓர் அங்கமாக உள்ளது. இங்குள்ள மக்களின் பாரம்பரிய உடைகளுக்கான ஆர்வத்தை முன்னிட்டு, எங்கள் 51வது ஷோரூமை இங்கு திறப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார். தலைமை வணிக அதிகாரி (CBO) சுரேஷ் ராமசுப்பிரமணியம் கூறுகையில்:  “கிரிவலம், கார்த்திகை தீபம், கோயில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற அனைத்துக் காலங்கள...

94 மரக்கன்றுகள், இனிப்பு, அன்னதானம் வழங்கி ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாளை கொண்டாடிய த.மா.கா தொண்டர்கள்

  தமிழ் மாநில காங்கிரஸ் (த மா கா) கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு 94 மரக்கன்றுகள் வழங்கி, 200 நபர்களுக்கு இனிப்பு மற்றும் திரளான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட த.மா.கா நிர்வாகிகள். திருவண்ணாமலை நகரின் காந்தி சிலை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட த.மா.கா மாவட்டத் தலைவர் ராயர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணி முன்னிலையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஜி.கே. மூப்பனாரின் 94 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 94 நபர்களுக்கு கொய்யா, நெல்லி, எலுமிச்சை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அத்துடன் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருள்வர்மா, விஜயகுமார், கல்லேரி சம்பத், மாநகரத் தலைவர் முத்தலிப், விவசாய பிரிவு மாவட்டத் தலை...

14வது அகில இந்திய பீமா கப் சிலம்ப போட்டிகளில் சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவி தாருணிகா ஶ்ரீ முதலிடம் பிடித்து சாதனை

  பாண்டிச்சேரியில் உள்ள ஆச்சாரியா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் அகில இந்திய அளவிலான 14வது பீமா கப் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 750 சிலம்ப மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். திருவண்ணாமலை சந்தானம் சிலம்பம் அகாடமி மாவட்ட தலைவர் ஆசான் சரவணன்.ச MBA, MTech தலைமையில் 15 சிலம்ப மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் திருவண்ணாமலை சந்தானம் சிலம்பம் அகாடமி சார்பில் போட்டியிட்ட தாருணிகா ஶ்ரீ.S. தான் பங்கேற்ற சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலையில் சந்தானம் சிலம்ப அகாடமி மூலம் மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வரும் சந்தானம் சிலம்பம் அகாடமி மாவட்டத் தலைவர் ஆசான் சரவணன்.ச MBA, MTech. அவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் பொன்னாடை போர்த்தி பாண்டிச்சேர...

ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு 53 ஆம் ஆண்டு திருவிழா

  திருவண்ணாமலை ஆகஸ்ட் 16. திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு 53 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.  காலை சக்திவேல் சாந்தமுருகன் சன்னதியில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அதனைத் தொடர்ந்து பால்குடம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது   பக்தர்கள் மார்பு மீது மஞ்சள் தூள் இடித்து செக்கிழுத்தல், அலகு அருகண்டம், கொதிக்கும் எண்ணெயில் பக்தர் கையால் வடை எடுத்தல், செடல் ,ஆகியவை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை முருகப்பெருமானுக்கு செய்தனர்.விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் விஜயலட்சுமி முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண தடை நீக்கும் கல்யாண முருகர் ஆலய 57ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா இடும்பன் கடம்பன் மகா கும்பத்துடன் நடைபெற்றது

  திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளானந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமலை வள்ளி தெய்வானை சமேத கல்யாண முருகர் ஆலயத்தில் 57 ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்யாண முருகருக்கு இன்று அதிகாலை அபிஷேக ஆராதனையும், பின்னர் மங்கள தீபமும் நடைபெற்றது. மாலை ஊஞ்சல் திருவிழாவும் இடும்பன் கடம்பன் மகா கும்பமும் நடைபெற்றது. ஆடிக்கிருத்திகை திருவிழாவினை பக்த கோடிகள் ஏராளமானோர் நேரில் வந்து அருள்மிகு ஸ்ரீமலை கல்யாண முருகர் தரிசித்து அரோகரா அரோகரா என பக்தி கோஷம் முழங்க தரிசித்து வேண்டி முருகனின் அருளை பெற்றனர்.  திருமணத்தடை நீக்கும் கல்யாண முருகரை வேண்டிக் கொண்டதும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேரு இல்லாதவர்கள் ஏராளமான இளைஞர்களுக்கு திருமணம் நடந்துள்ளது, குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   கோயில் தர்மகர்த்தா என்.கந்தசாமி, நிர்வாக குழுவினர் எஸ்.எம்.முருகேஷ், டி.ஜி.முருகன், எஸ்.முருகன், ஆர்.மதியழகன், சி.அர்ஜுனன், பி.விஜயராஜ், கே.பரதன், ஆர்.நாகேஷ், எஸ்.ஏழுமலை, எஸ். சிவ சரவணன், எம்.பூமிநாதன்,  கோயில் பூசாரி ஏ.கே.முருகன், மற்றும் ஊர்...

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

  திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர் கிராமம், காமராஜர் நகரில் குடுகுடுப்பு கனிக்கர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.   கணபதி ஹோமம். நவகிரக பூஜை, யாகத்துடன் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் எடுத்துச் சென்று முத்து மாரியம்மன் ஆலய கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கலசபிஷேகம் செய்த புனித நீரை தெளிக்கப்பட்டது. மேலும் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்களுடன் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். கனிக்கர்களால் அமைக்கப்பட்ட திருக்கோவிலில் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட குறைபாடுகளுடன் முத்துமாரியம்மன் தரிசனம் செய்தால் பிரார்த்தனை நிறைவேறும் என கனிகர்கள் தெரிவித்தனர்.

கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் 2025 மற்றும் 2026 ஆண்டிற்கான தடகளப் போட்டிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்.  ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த கீழ்பெண்ணாத்தூரை சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவன் பூவரசன் மற்றும் இரண்டாம் பரிசு மங்களம் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் அம்பேத்கர் உள்ளிட்ட ஐந்து மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழினை சட்டப்பேரவை துணைத் தலைவர் வழங்கினார்.   இந்த போட்டியில் மாணவர்களிடையே அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டியை துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள். பள்ளி மாணவ மாணவிகள். பெற்றோர்கள். ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

வரட்சியை நீக்கி பசுமையான சூழலை உருவாக்க தனது தாயின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 2500 மரக்கன்றுகளை வழங்கிய மகன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பழ மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த லியோ பால் பரமானந்தம் தலைமையில் ஆவூர் கிராம பொதுமக்களுக்கு தனது தாயின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு 2500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 2500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், ஆவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்சஸ் தாஸ் பரமானந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜப்பார், முன்னாள் கவுன்சிலர் எஸ். சூர்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு சமயத்தில் ஆவூர் கிராமத்தில் குடிநீருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், 1500 அடி ஆழத்தில் குடிநீருக்காக போர் போட்டாலும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்ததாகவும், இதனை கருத்தில் கொண்டு வரட்சி நீக்கும் நோக்கத்திலும், பசுமையை உருவாக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாமரம், தென்னை மர...