பாரம்பரிய வெஷ்டிகளை நவீன வடிவமைப்பில் வழங்கி வரும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனம், தனது 51வது பிரத்யேக ஷோரூமை இன்று திருவண்ணாமலை நகரில் திறந்து வைத்தது.
சின்னக்கடை வீதியில், மாவட்ட வன அலுவலகம் எதிரில், அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள புதிய ஷோரூமை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் டி.வி.எஸ். இராசாரம் திறந்து வைத்தார். ஹோட்டல் ஹிமாலயா மேலாண்மை இயக்குனர் ஆர். முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை பி. கார்த்திவேல்மாறன் மற்றும் டி. ராஜேஷ் தொடங்கி வைத்தனர்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) போத்திராஜ் பேசுகையில்:
“ஆன்மிகமும் பாரம்பரியமும் இணைந்த திருவண்ணாமலையில், வெஷ்டி–சட்டை அணிவது வாழ்வின் ஓர் அங்கமாக உள்ளது. இங்குள்ள மக்களின் பாரம்பரிய உடைகளுக்கான ஆர்வத்தை முன்னிட்டு, எங்கள் 51வது ஷோரூமை இங்கு திறப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.
தலைமை வணிக அதிகாரி (CBO) சுரேஷ் ராமசுப்பிரமணியம் கூறுகையில்:
“கிரிவலம், கார்த்திகை தீபம், கோயில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற அனைத்துக் காலங்களிலும் பாரம்பரிய உடைகளுக்கு அதிகமான தேவை உள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகளை ஒருங்கிணைக்கும் மினிஸ்டர் ஒயிட் தயாரிப்புகள் திருவண்ணாமலை மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெறும்,” என்றார்.
2014 ஆம் ஆண்டு தொடங்கிய மினிஸ்டர் ஒயிட், தற்போது தென்னிந்தியாவில் 51 பிரத்யேக ஷோரூம்கள் மற்றும் நாடு முழுவதும் 5,000+ மல்டி-பிராண்ட் கடைகள் வழியாக விற்பனையில் முன்னணியில் உள்ளது. 2026–27 ஆம் ஆண்டுக்குள் 100 ஷோரூம்கள் என்ற இலக்கை அடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.





Comments
Post a Comment