லான்சன் டொயோட்டாவின் பிரம்மாண்ட ஷோரூமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை நொச்சிமலை பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள லான்சன் டொயோட்டாவின் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரை தமிழக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் லங்கா லிங்கம், கூடுதல் இயக்குனர் சிவங்கா லங்கா லிங்கம், நிர்வாக இயக்குனர் திருமதி விஜயலட்சுமி சிவங்கா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி ராஜ்குமார் சிங் முன்னிலையில் பிரம்மாண்டமான ஷோரூம் திறந்து வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை லான்சன் டொயோட்டா கிளையின் ஊழியர்கள் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் புதிதாக வாகனத்தை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சாவி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment