14வது அகில இந்திய பீமா கப் சிலம்ப போட்டிகளில் சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவி தாருணிகா ஶ்ரீ முதலிடம் பிடித்து சாதனை
பாண்டிச்சேரியில் உள்ள ஆச்சாரியா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் அகில இந்திய அளவிலான 14வது பீமா கப் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 750 சிலம்ப மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
திருவண்ணாமலை சந்தானம் சிலம்பம் அகாடமி மாவட்ட தலைவர் ஆசான் சரவணன்.ச MBA, MTech தலைமையில் 15 சிலம்ப மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் திருவண்ணாமலை சந்தானம் சிலம்பம் அகாடமி சார்பில் போட்டியிட்ட தாருணிகா ஶ்ரீ.S. தான் பங்கேற்ற சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் திருவண்ணாமலையில் சந்தானம் சிலம்ப அகாடமி மூலம் மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வரும் சந்தானம் சிலம்பம் அகாடமி மாவட்டத் தலைவர் ஆசான் சரவணன்.ச MBA, MTech. அவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் பொன்னாடை போர்த்தி பாண்டிச்சேரியைச் சேர்ந்த போட்டி நடத்துநர் R.சரவணன் மரியாதை செலுத்தினார்.



Comments
Post a Comment