கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் 2025 மற்றும் 2026 ஆண்டிற்கான தடகளப் போட்டிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்.
ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த கீழ்பெண்ணாத்தூரை சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவன் பூவரசன் மற்றும் இரண்டாம் பரிசு மங்களம் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் அம்பேத்கர் உள்ளிட்ட ஐந்து மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழினை சட்டப்பேரவை துணைத் தலைவர் வழங்கினார்.
இந்த போட்டியில் மாணவர்களிடையே அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டியை துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள். பள்ளி மாணவ மாணவிகள். பெற்றோர்கள். ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்



Comments
Post a Comment