அமைப்புசாரா ஓட்டுநர்கள் அரசு நலத்திட்ட உதவி பெற தங்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் முகாம்
திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் எதிரில் உள்ளஅமைப்புசாரா ஓட்டுநர்கள் அரசு நலத்திட்ட உதவி பெற தங்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் முகாம் மாநகராட்சி மைதான திடலில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி நிலையத்தில் அனைத்து விதமான ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான படிவம் பெறுவதற்கான முகாம் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் துணை அமைப்பாளர் இரா.அர்ஜுனன், நகர தலைவர் தா.தட்சிணாமூர்த்தி, தொழிலாளர் நல உதவி கணக்கு அலுவலர் பி.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையாளர் திருமதி R.வேதநாயகி அவர்கள் முகாமை தொடக்கி வைத்து படிவத்தை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டார்.
தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து விதமான ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களின் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து தமிழ்நாடு அரசு சார்பில் கணக்கெடுப்பு நடத்தி அனுப்பி நலத்திட்டங்கள் பெற்றிட வழி செய்யும் முகாமாக இந்த முகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் படிவம் பெற்று தங்கள் விவரங்களை வடிவங்களில் பூர்த்தி செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து இருந்தார்.





Comments
Post a Comment