திருவண்ணாமலை ஆகஸ்ட் 16. திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு 53 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
காலை சக்திவேல் சாந்தமுருகன் சன்னதியில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அதனைத் தொடர்ந்து பால்குடம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது
பக்தர்கள் மார்பு மீது மஞ்சள் தூள் இடித்து செக்கிழுத்தல், அலகு அருகண்டம், கொதிக்கும் எண்ணெயில் பக்தர் கையால் வடை எடுத்தல், செடல் ,ஆகியவை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை முருகப்பெருமானுக்கு செய்தனர்.விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் விஜயலட்சுமி முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment