ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர் கிராமம், காமராஜர் நகரில் குடுகுடுப்பு கனிக்கர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கணபதி ஹோமம். நவகிரக பூஜை, யாகத்துடன் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் எடுத்துச் சென்று முத்து மாரியம்மன் ஆலய கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கலசபிஷேகம் செய்த புனித நீரை தெளிக்கப்பட்டது. மேலும் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்களுடன் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். கனிக்கர்களால் அமைக்கப்பட்ட திருக்கோவிலில் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட குறைபாடுகளுடன் முத்துமாரியம்மன் தரிசனம் செய்தால் பிரார்த்தனை நிறைவேறும் என கனிகர்கள் தெரிவித்தனர்.



Comments
Post a Comment