94 மரக்கன்றுகள், இனிப்பு, அன்னதானம் வழங்கி ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாளை கொண்டாடிய த.மா.கா தொண்டர்கள்
தமிழ் மாநில காங்கிரஸ் (த மா கா) கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு 94 மரக்கன்றுகள் வழங்கி, 200 நபர்களுக்கு இனிப்பு மற்றும் திரளான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட த.மா.கா நிர்வாகிகள்.
திருவண்ணாமலை நகரின் காந்தி சிலை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட த.மா.கா மாவட்டத் தலைவர் ராயர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணி முன்னிலையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜி.கே. மூப்பனாரின் 94 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 94 நபர்களுக்கு கொய்யா, நெல்லி, எலுமிச்சை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அத்துடன் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அருள்வர்மா, விஜயகுமார், கல்லேரி சம்பத், மாநகரத் தலைவர் முத்தலிப், விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் உத்தண்டி, ஆசிரியர் பொன் கண்ணாயிரம்,
வட்டாரத் தலைவர் முனியன், ஜெயக்கொடி, குட்டி பாபு, குமரன் உள்ளிட்ட திரளான மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஜி.கே.மூப்பனார் அவர்களின் 94வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.





Comments
Post a Comment