வரட்சியை நீக்கி பசுமையான சூழலை உருவாக்க தனது தாயின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 2500 மரக்கன்றுகளை வழங்கிய மகன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பழ மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை
சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 2500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், ஆவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்சஸ் தாஸ் பரமானந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜப்பார், முன்னாள் கவுன்சிலர் எஸ். சூர்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு சமயத்தில் ஆவூர் கிராமத்தில் குடிநீருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், 1500 அடி ஆழத்தில் குடிநீருக்காக போர் போட்டாலும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்ததாகவும், இதனை கருத்தில் கொண்டு வரட்சி நீக்கும் நோக்கத்திலும், பசுமையை உருவாக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாமரம், தென்னை மரம், கொய்யா மரம் ஆகிய பழ மரங்கள் வழங்கப்பட்டது.
நியூசிலாந்து நாட்டில் பழ மரங்களில் விளையும் பழங்களை சாலை ஓரங்களில் பொதுமக்கள் பறித்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. அதுபோல் ஆவூர் கிராமத்திலும் பழ மரங்களை வளர்த்து அதன் பலனை அனுபவிக்க வேண்டும், உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லியோ பால் பரமானந்தம் அவர்கள் இந்த மரக்கன்றுகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment