தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்த 5 வயது சிறுமி ஸ்ரீதன்யா வினோத் மற்றும் S.தாருணிகாஸ்ரீ
கடலூரில் உள்ள கோபால் செட்டியார் திருமண மண்டபத்தில் நோபல் வோல்ட் ரெக்கார்ட் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம், யோகா, பரதநாட்டியம், கராத்தே மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் பரதநாட்டிய மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிலம்பம் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
இதில் ஸ்ரீதன்யா வினோத் (5 வயது), S.தாருணிகாஸ்ரீ ஆகிய இரு மாணவிகளும் சிறப்பாக தொடர்ந்து 45 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர்.
தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த ஸ்ரீதன்யா வினோத் (5 வயது), S.தாருணிகாஸ்ரீ ஆகிய இருவரும் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தனர் .
இவர்கள் இருவரையும் பாராட்டி சிறப்பு விருந்தினர் கராத்தே ராஜா மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகிய திரைப்பட நடிகர்கள் வெற்றி பெற்ற இருவருக்கும் சான்றிதழ் , மெடல் மற்றும் கோப்பைகளை வழங்கினர்..
உடன் சந்தானம் சிலம்பம் அகாடமி நிறுவனர், பயிற்சியாளர் ஆசான் ச.சரவணன் MBA ,MTech. சிலம்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.








Comments
Post a Comment