Skip to main content

Posts

Showing posts from November, 2023

மகா தீபம் நிறைவுற்று கிரிவலம் வந்த அண்ணாமலையாருக்கு கொட்டும் மழையிலும் பூஜை செய்து காணிக்கை செலுத்திய அருணாச்சலம் அடியார்கள்!

  திருவண்ணாமலை கிரிவலப் பாதை, காஞ்சி சாலையில் உள்ள ஸ்ரீ அருணாச்சலம் மகா அன்னதான மடம், சிவராம சக்தி பீடம், கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை சார்பில் கிரிவலம் வந்த ஸ்ரீ ஆதி அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அருணாச்சலம் மகா அன்னதான மடம் நிறுவனர் அருணாச்சலம் அடியார்கள் அறுசுவை அன்னதானம் மற்றும் உதவித்தொகை வழங்கினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலை சந்திரலிங்கம் அருகே ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் உள்ளது. ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் மற்றும் கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அருணாச்சலம் அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் முடிந்து அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் வரும்போது ஆண்டாண்டு காலமாக பொதுமக்களுக்கு அன்னதானம், சாதுகளுக்கு வஸ்திர தானம் மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை மகா தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் முடிந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம் வந்தபோது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறப்பு பூஜைகள் செய்து...

கார்த்திகை தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்

  திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே பாரத பிரதமர் நரேந்திர மோடி 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக அரியணையில் அமர வேண்டும் என்பதற்காக பாஜக மாவட்ட தலைவர் பட்டியலணி விஜயராஜ் தலைமையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை காண 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கார்த்திகை தீபத் திருவிழாவை கண்டு கிரிவலம் சென்று வருகின்றனர்.  அவ்வாறு வரும் பக்த கோடிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் விஜயராஜ் பட்டியலணி அவருடைய தலைமையில் பாரதப் பிரதமர் 2024 இல் மீண்டும் அரியணை ஏற வேண்டும், உலகம் போற்றும் உத்தமராக பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அரியணையில் ஏறி ஆட்சி புரிய வேண்டும் என்று பாரதத்தாய் ஈன்றெடுத்த தவப் புதல்வன் அவருடைய வழி கேட்டு உலக நாடுகள் எல்லாம் பின்பற்ற வேண்டும்.  ஆன்மீகத்துக்கு குருவாக இந்தியாவை பார்த்து இந்தியாவினுடைய வழி நடக்க வேண்டுமென அடிமுடி காணாத அண்ணாமலையாரை வேண்டி அவரைக் காண வந்த பக்த...

ஆனைக்கல் குன்றின் மீது முதலாம் ஆண்டு மகாதீபம், பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, வான வேடிக்கை, அன்னதானம் என கோலாகலம்

  திருவண்ணாமலை மாவட்டம், ராந்தம் கூட்ரோடு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆனைக்கல் குன்றின் மீது முதலாம் ஆண்டாக மகாதீபம் ஏற்றப்பட்டது. திருப்புகழ் செல்வர் டாக்டர் இராமையா அவர்களின் பக்தி மனம் கமழும் சொற்பொழிவு மற்றும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர். அப்போது வான வேடிக்கையும் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. ஆனைக்கல் குன்றின் மீது மகா தீபம் ஏற்றிய பின்னர் செல்வ விநாயகர் ஆலயத்தைச் சுற்றி அகல்விளக்குகளில் தீப ஒளி பிரகாசிப்பில் செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து தீபா ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது. ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய விழா குழுவினர் சார்பாக வீரப்பன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் தர்மலிங்கம், மணிகண்டன், அமுலு உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது. ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலுக்கு வள்ளல் குணம் படைத்த கார்த்தி, கலா தம்பதியர் பூமிதானம் கொடையாக அளித்து க...

அன்னதானம் செய்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கும் குண்டர்கள், கோயிலை இடித்து சிலைகளை திருடியதால் பரபரப்பு

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடிஅண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோசாலை அருகே விபூதி சித்தர் செல்வம் என்பவரின் ஆசிரமம் உள்ளது. அங்கு சிறிய கோயில் கட்டி விபூதி சித்தர் வழிபாடு நடத்தி வந்துள்ளார். விபூதி சித்தரின் ஆசிரமத்தை குண்டர்கள் சிலர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஷ்ரமத்திற்கு சொந்தமான கோயிலை குண்டர்கள் இடித்து தரைமட்டமாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் கட்டியிருந்த கோயிலை இடித்து விட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, சிலைகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். தற்போது நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்காக விபூதி சித்தர் செல்வம் திருவண்ணாமலை வந்துள்ளார். இந்த நிலையில் குண்டர்கள் செல்வம் என்கின்ற விபூதி சித்தரை அன்னதானம் செய்யக்கூடாது, நீ எப்படி அன்னதானம் செய்கிறாய் என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று இருமாப்புடன் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மீறி அன்னதானம் செய்தால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து விபூதி சித்தர் திருவண்ணாமலை மாவட்ட காவல...

உலக அமைதிக்காக பரதநாட்டியம் ஆடி 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்த 8ம் வகுப்பு மாணவி

  பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தேவி தம்பதியரின் மகள் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணி ஸ்ரீ கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 3ம் ஆண்டாக 14 கிலோமீட்டர் தொலைவுள்ள கிரிவலப் பாதையை நடனம் ஆடியபடி கிரிவலம் சுற்றி வந்து உலக நன்மைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு இந்த நிகழ்ச்சியை பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் துவக்கி வைத்தார். திருக்கோவிலூரை சேர்ந்த சிவஸ்ரீ நாட்டியப்பள்ளி மாணவி ஹரிணி ஸ்ரீ உலக அமைதிக்காக 14 கிலோமீட்டர் தொலைவுள்ள திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலப் பாதையை பரதநாட்டியம் ஆடியபடி 3ம் ஆண்டாக சுற்றி வந்தார்.ராஜகோபுரம் முன்பு இந்த நிகழ்ச்சியை பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் துவக்கி வைத்தார்.   சித்ரா பௌர்ணமி, விசேஷ பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் என ஆண்டுக்கு மூன்று முறை விசேஷ நாட்களில் கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் ...

சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டி மகா ருத்ர யாகம் டிசம்பர் மாதம் 24 25 26 ஆம் தேதிக்கு மாற்றம், பாஜக மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

  பாரதப் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமரவும், சனாதன தர்மம் தழைத்து ஓங்கவும் வருகிற நவம்பர் 21 முதல் 23 வரை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் பட்டியல் அணி பாஜக மாவட்ட  தலைவர் R.விஜயராஜ் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பின் மூலமாக நடைபெறுகின்ற மகா ருத்ர யாகம் வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாதம் தொடர் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிசம்பர் மாதம் 24 25 26 ஆகிய மூன்று நாட்களில் மகா ருத்ரையாக ஆனது நடைபெறும் என்று தள்ளி வைக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 23ஆம் தேதி மகா ருத்ர யாகத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். மகா ருத்ர யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால் சாதுக்களும் சன்னியாசிகளும் பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டியும், வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பாரதப் பிரதமராக அரியணையில் அமர வேண்டி, ...

அச்சமில்லாதவர் அண்ணன் அண்ணாமலை!

  அச்சமில்லாதவர். அண்ணன் திரு. அண்ணாமலை ‌‌.  அல்லும் பகலும். அயிராமல். ‌. அனைவருக்கும். அறத்தொண்டு செய்பவர் அச்சத்தை அகற்றும் அதிவீரமானவர். அலட்சியத்தை அறுக்கும். அவசியமானவர் அதிகாரத்தை அடக்க. அவதரித்த அருந்தவ புதல்வர் திரு அண்ணன் அண்ணாமலை அரசரே அலைகடலும். அழைக்கும் அடிபணிந்து வணங்கும் அனைத்தும் அத்தனையும் அவருக்கு நிகர் அடுத்தவரும் இல்லை அறிவார் அடங்காத வரை. அடக்கவே. அரங்கேற்றம் செய்பவர் அகிலமும் போற்றுவர் அச்சமில்லை எவனும் மிச்சம் இல்லை அடைக்கலம் வருபவருக்கு அன்பானவர் அறவழியில் அணுகாதவருக்கு அதிகாரமானவர் அதிசயம் அவர் செயல் அடாவடி தனம் செய்பவரை அடங்காதவனை அனுப்பிவிடுவார் திருந்த வாய்ப்பு தந்திடுவார் அவர். அரசியல் பணி அனைவருக்கும் தனி வழி தந்திடுவார் இனி கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ

தீபாவளி வாழ்த்து கவிதை!

  தீயவை அகற்றிடும்! தினம் தினம் புகற்றிடும்! திங்களும் வாழ்த்திடும்! திகைத்திட தோன்றிடும்! திசையெங்கும் புகைமூட்டம்! திரும்பினால் பகைவோடும்! தீராத பகைவிடும்! திருப்புமுனை ஏற்படும்! தீவிரமா முயற்சிஎழும்!  திறனற்ற! தீய சக்திக்கு விடுமுறை தந்திடம் நிரந்தரமா புதிய வழி! திரும்பத் திரும்ப வந்திடனும்! திறமை வாய்ந்த பாரதம்! தீபாவளி நன்னாளில்! தீந்தமிழால் வாழ்த்திடனும் அடுத்த முறை! தீபாவளி திருவிழாவை மோடி ஆட்சி கொண்டாடிடும் திருவிழா கோலாகலமாக மீண்டும் ஆட்சியைப் அமைத்திடும்! வெற்றி! வெற்றியே! தீபாவளி நல்வாழ்த்துக்கள்! கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ, ஒன்றிய தலைவர், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம்.

ஜேசிபி எந்திரம் மூலம் வீட்டை தரைமட்டமாக்கிய மகன், நடுத்தெருவில் தாய் கதறல்

திருவண்ணாமலை நகரம் வேங்கிக்கால் குளத்துமேட்டு தெருவில் வசந்தா(எ) ஆயிஷா (வயது 56) தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டை புருஷோத்தமன் மற்றும் அபிஷேக் என்பவர்கள் போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை புருஷோத்தமன், அபிஷேக், பாபு, விஷ்ணு, சௌமியா, செல்வம் உள்ளிட்ட உள்ளிட்ட புருஷோத்தமனின் குடும்பத்தினர், நண்பர்களுடன் திரண்டு சென்று வசந்தாவின் வீட்டுக் கதவை எட்டி உதைத்து உள்ளே புகுந்து வீச்சருவாள் மற்றும் இரும்பு ராடால் வசந்தா மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வீச்சருவாள் மற்றும் இரும்புராடால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். செல்வியின் கழுத்தில் வெட்ட முயற்சித்தபோது செல்வி தடுத்ததில் கத்தி திரும்பியதால்   செல்வியின் தலை மற்றும் கையில் ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயமடைந்துள்ளார். பலத்த காயமடைந்த வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அத்தோடு விடாமல் புர...

ரோட்டரி கிளப் உறுப்பினர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர்கள், பழைய மற்றும் புதிய உறுப்பினர்களுடைய குடும்பத்தார் கலந்து கொண்ட சார்டர் தினம் என்ற சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ரோட்டேரியன் முத்து பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் அனைவரும் தங்கள் கண்களை நாற்பது வயதுக்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கண் பார்வை முற்றிலும் பாதிப்படையும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.  மாவட்ட சேர்மன் பரூக் பாஷா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.  மாவட்டத் தலைவர் ரொட்டேரியன் கே.எல்.வின்சென்ட், அண்ணாமலையார் திருக்கோயில் பூரண கும்ப மரியாதை மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தார். ரோட்டோரின் சித்ரா கோல்ட் பன்னீர்செல்வம், அப்துல் சமது, செந்தில்குமார், விமல்குமார், சரவணகுமார் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர். செயலாளர் கஜேந்திரன...

வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், பூதமங்கலம் மதுரா ஆனந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை கும்பாபிஷேக திருப்பணிகள் தேவதா அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், மகா தீபாராதனையுடன் துவங்கியது. பின்னர் நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி,  கும்பலங்காரம், அங்குரார்பணம்,  ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டாவை நடைபெற்றது. இன்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, பிரான பிரதிஷ்டை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்களால் கலசங்கள் கோயிலை சுற்றி வந்து கோயில் உச்சியில் அமைக்கப்பெற்ற கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம...