கார்த்திகை தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்
திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே பாரத பிரதமர் நரேந்திர மோடி 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக அரியணையில் அமர வேண்டும் என்பதற்காக பாஜக மாவட்ட தலைவர் பட்டியலணி விஜயராஜ் தலைமையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை காண 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கார்த்திகை தீபத் திருவிழாவை கண்டு கிரிவலம் சென்று வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்த கோடிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் விஜயராஜ் பட்டியலணி அவருடைய தலைமையில் பாரதப் பிரதமர் 2024 இல் மீண்டும் அரியணை ஏற வேண்டும், உலகம் போற்றும் உத்தமராக பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அரியணையில் ஏறி ஆட்சி புரிய வேண்டும் என்று பாரதத்தாய் ஈன்றெடுத்த தவப் புதல்வன் அவருடைய வழி கேட்டு உலக நாடுகள் எல்லாம் பின்பற்ற வேண்டும்.
ஆன்மீகத்துக்கு குருவாக இந்தியாவை பார்த்து இந்தியாவினுடைய வழி நடக்க வேண்டுமென அடிமுடி காணாத அண்ணாமலையாரை வேண்டி அவரைக் காண வந்த பக்தர்களுக்கு திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தின் அருகில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம் வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சனி ஞாயிறு திங்கள் 3 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் ஆன்மீகவாதி விஜயராஜ் உடைய இந்த தீவிர முயற்சியால் மாதா மாதம் பௌர்ணமி அன்று அன்னதானம் பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் அவர்கள் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment