சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டி மகா ருத்ர யாகம் டிசம்பர் மாதம் 24 25 26 ஆம் தேதிக்கு மாற்றம், பாஜக மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
பாரதப் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமரவும், சனாதன தர்மம் தழைத்து ஓங்கவும் வருகிற நவம்பர் 21 முதல் 23 வரை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் பட்டியல் அணி பாஜக மாவட்ட தலைவர் R.விஜயராஜ் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பின் மூலமாக நடைபெறுகின்ற மகா ருத்ர யாகம் வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாதம் தொடர் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிசம்பர் மாதம் 24 25 26 ஆகிய மூன்று நாட்களில் மகா ருத்ரையாக ஆனது நடைபெறும் என்று தள்ளி வைக்கப்படுகிறது.
நவம்பர் மாதம் 23ஆம் தேதி மகா ருத்ர யாகத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும்.
மகா ருத்ர யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால் சாதுக்களும் சன்னியாசிகளும் பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டியும், வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பாரதப் பிரதமராக அரியணையில் அமர வேண்டி, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஆன்மீகத் தளத்தில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோயில் வளாகத்தில் மகா ருத்ர யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்ட தலைவர் R.விஜயராஜ் அவர்கள் தலைமையில் மகா ருத்ர யாகம் நடைபெற உள்ளது. இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக மகா ருத்ர யாகத்தில் பங்கேற்க உள்ளார்.
உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பின் மூலமாக நடைபெறுகின்ற மகா ருத்ர யாகத்தினை கேரள மாநிலம் பாலக்காடு சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் சத்குரு வியாசானந்தா சிவயோகி மற்றும் திருவண்ணாமலை ஓம் குடில் டிரஸ்ட் சிவனடியார் சிவ வெற்றிவேல் ஆகியோர் மகா ருத்ர யாகத்தை நடத்தி வைக்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.
மகா ருத்ர யாகம் நடைபெறுவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய பட்டியலனி மாவட்ட தலைவர் R.விஜயராஜ் கூறுகையில், சனாதன தர்மத்தை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும், சனாதன தர்மம் உலகெங்கும் தழைத்து வளர வேண்டும், பாரத அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமர வேண்டும். இந்த யாகத்திற்கு ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர்கள், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள், ஆந்திரா கர்நாடகா தமிழகம் கேரளா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் அனைவரும் கலந்து கொண்டு இந்த யாகத்தை சிறப்பிக்க உள்ளனர். அனைத்து பொதுமக்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு அருள் பெற வேண்டும் என்று அனைவரையும் வரவேற்கிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜயராஜ் அவர்கள் கூறினார்.





Comments
Post a Comment