ஆனைக்கல் குன்றின் மீது முதலாம் ஆண்டு மகாதீபம், பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, வான வேடிக்கை, அன்னதானம் என கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், ராந்தம் கூட்ரோடு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆனைக்கல் குன்றின் மீது முதலாம் ஆண்டாக மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருப்புகழ் செல்வர் டாக்டர் இராமையா அவர்களின் பக்தி மனம் கமழும் சொற்பொழிவு மற்றும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர். அப்போது வான வேடிக்கையும் சிறப்பான முறையில் செய்யப்பட்டது.
ஆனைக்கல் குன்றின் மீது மகா தீபம் ஏற்றிய பின்னர் செல்வ விநாயகர் ஆலயத்தைச் சுற்றி அகல்விளக்குகளில் தீப ஒளி பிரகாசிப்பில் செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து தீபா ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய விழா குழுவினர் சார்பாக வீரப்பன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் தர்மலிங்கம், மணிகண்டன், அமுலு உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது.
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலுக்கு வள்ளல் குணம் படைத்த கார்த்தி, கலா தம்பதியர் பூமிதானம் கொடையாக அளித்து கோயில் சிறப்புற அமைய அனைத்து விழாக்குழுவினரும் உதவி புரிந்தனர்.







Comments
Post a Comment