வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், பூதமங்கலம் மதுரா ஆனந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று காலை கும்பாபிஷேக திருப்பணிகள் தேவதா அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், மகா தீபாராதனையுடன் துவங்கியது.
பின்னர் நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்பலங்காரம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டாவை நடைபெற்றது.
இன்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, பிரான பிரதிஷ்டை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்களால் கலசங்கள் கோயிலை சுற்றி வந்து கோயில் உச்சியில் அமைக்கப்பெற்ற கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.







Comments
Post a Comment