மகா தீபம் நிறைவுற்று கிரிவலம் வந்த அண்ணாமலையாருக்கு கொட்டும் மழையிலும் பூஜை செய்து காணிக்கை செலுத்திய அருணாச்சலம் அடியார்கள்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதை, காஞ்சி சாலையில் உள்ள ஸ்ரீ அருணாச்சலம் மகா அன்னதான மடம், சிவராம சக்தி பீடம், கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை சார்பில் கிரிவலம் வந்த ஸ்ரீ ஆதி அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அருணாச்சலம் மகா அன்னதான மடம் நிறுவனர் அருணாச்சலம் அடியார்கள் அறுசுவை அன்னதானம் மற்றும் உதவித்தொகை வழங்கினார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலை சந்திரலிங்கம் அருகே ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் உள்ளது.
ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான மடம் மற்றும் கிராம திருக்கோயில் திருப்பணி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அருணாச்சலம் அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் முடிந்து அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் வரும்போது ஆண்டாண்டு காலமாக பொதுமக்களுக்கு அன்னதானம், சாதுகளுக்கு வஸ்திர தானம் மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை மகா தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் முடிந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம் வந்தபோது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி வணங்கி வழிபட்டார்.
பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும், நூற்றுக்கணக்கான கிரிவல தூய்மை பணியாளர்களுக்கு உதவித்தொகை, இனிப்பு சாதுக்களுக்கு வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அருணாச்சலம் அடியார்கள் ஆன்மீகப் பணியை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment