பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தேவி தம்பதியரின் மகள் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணி ஸ்ரீ கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 3ம் ஆண்டாக 14 கிலோமீட்டர் தொலைவுள்ள கிரிவலப் பாதையை நடனம் ஆடியபடி கிரிவலம் சுற்றி வந்து உலக நன்மைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு இந்த நிகழ்ச்சியை பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் துவக்கி வைத்தார்.
திருக்கோவிலூரை சேர்ந்த சிவஸ்ரீ நாட்டியப்பள்ளி மாணவி ஹரிணி ஸ்ரீ உலக அமைதிக்காக 14 கிலோமீட்டர் தொலைவுள்ள திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலப் பாதையை பரதநாட்டியம் ஆடியபடி 3ம் ஆண்டாக சுற்றி வந்தார்.ராஜகோபுரம் முன்பு இந்த நிகழ்ச்சியை பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் துவக்கி வைத்தார்.
சித்ரா பௌர்ணமி, விசேஷ பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் என ஆண்டுக்கு மூன்று முறை விசேஷ நாட்களில் கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் ஆடியபடி எட்டாம் வகுப்பு மாணவி ஹரிணி ஸ்ரீ கிரிவலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவருடன் பரதநாட்டிய பயிற்சி ஆசிரியர் மற்றும் தாயார் தேவி உடன் வந்தார்.





Comments
Post a Comment