திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர்கள், பழைய மற்றும் புதிய உறுப்பினர்களுடைய குடும்பத்தார் கலந்து கொண்ட சார்டர் தினம் என்ற சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ரோட்டேரியன் முத்து பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் அனைவரும் தங்கள் கண்களை நாற்பது வயதுக்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கண் பார்வை முற்றிலும் பாதிப்படையும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
மாவட்ட சேர்மன் பரூக் பாஷா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாவட்டத் தலைவர் ரொட்டேரியன் கே.எல்.வின்சென்ட், அண்ணாமலையார் திருக்கோயில் பூரண கும்ப மரியாதை மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தார்.
ரோட்டோரின் சித்ரா கோல்ட் பன்னீர்செல்வம், அப்துல் சமது, செந்தில்குமார், விமல்குமார், சரவணகுமார் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் பாஸ்கர், பூர்ண சந்திரன், சேகர், பயாஸ் அலி உள்ளிட்ட ரோட்டரி கிளப் உறுப்பினர்களின் குடும்பத்தினர் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.




Comments
Post a Comment