Skip to main content

ஜேசிபி எந்திரம் மூலம் வீட்டை தரைமட்டமாக்கிய மகன், நடுத்தெருவில் தாய் கதறல்

திருவண்ணாமலை நகரம் வேங்கிக்கால் குளத்துமேட்டு தெருவில் வசந்தா(எ) ஆயிஷா (வயது 56) தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான வீட்டை புருஷோத்தமன் மற்றும் அபிஷேக் என்பவர்கள் போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நேற்று காலை புருஷோத்தமன், அபிஷேக், பாபு, விஷ்ணு, சௌமியா, செல்வம் உள்ளிட்ட உள்ளிட்ட புருஷோத்தமனின் குடும்பத்தினர், நண்பர்களுடன் திரண்டு சென்று வசந்தாவின் வீட்டுக் கதவை எட்டி உதைத்து உள்ளே புகுந்து வீச்சருவாள் மற்றும் இரும்பு ராடால் வசந்தா மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வீச்சருவாள் மற்றும் இரும்புராடால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செல்வியின் கழுத்தில் வெட்ட முயற்சித்தபோது செல்வி தடுத்ததில் கத்தி திரும்பியதால்   செல்வியின் தலை மற்றும் கையில் ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயமடைந்துள்ளார். பலத்த காயமடைந்த வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


அத்தோடு விடாமல் புருஷோத்தமன் தனது ஜேசிபி இயந்திரம் மூலம் அவரது குடும்பத்தினருடன் சென்று வசந்தா குடியிருந்த மெத்தை வீட்டை இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளார்.


இதில் ஆயிஷா தனது வீட்டில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூபாய் 30,000 உள்ளிட்டவற்றை புருஷோத்தமன் அபிஷேக் ஆகியோர் திருடி கொண்டு சென்றுள்ளனர். வீட்டில் உள்ள டிவி மற்றும் பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களை அனைத்து விட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை தரைமட்டமாக்கி சொந்த மகனே தாய் குடி இருந்த வீட்டை தரைமட்டம் ஆக்கியுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் வசந்தா புகார் மனு அளித்துள்ளார்.  வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் தரைமட்டமாக்கி தனக்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கச் செய்து விட்டனர். எனவே குற்றவாளிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.


மகனே தாய் குடி இருந்த வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் அடியாட்களை வைத்து தரைமட்டமாக்கி தாயை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...