எ.வ.வேலு திமுகவின் ஏ.டி.எம் வேலு, ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முதலமைச்சர் வர மாட்டார் என அண்ணாமலை குற்றச்சாட்டு
குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தன ஆட்சி, ஜாதி வைத்து ஆட்சி இவை நான்கையும் வெளியேற்ற வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலசப்பாக்கத்தில் நடைபாதை என யாத்திரையும் மேற்கொண்டார் கலசப்பாக்கம் தொகுதியில் வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களால் மிகுந்து வரவேற்பளிக்கப்பட்டது. யாத்திரை முடித்து பேசுகையில், குடும்ப ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஊழல் ஆட்சியை வெளியேற்ற வேண்டும், அடாவடித்தன ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஜாதி வைத்த ஆட்சி செய்வதை வெளியேற்ற வேண்டும், இவை நான்கையும் வரும் தேர்தலில் வெளியேற்ற வேண்டும் என பேசினார். தமிழக முதல்வர் திருவண்ணாமலைக்கு 31 மாதங்களில் இரண்டு முறை வந்துள்ளார், முதல் முறை வந்தது எதற்காக என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி திறந்து வைப்பதற்கு, இரண்டாவது முறை எதற்கு வந்தார் என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு வந்தார். ஏழை மக்களுக...