எ.வ.வேலு திமுகவின் ஏ.டி.எம் வேலு, ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முதலமைச்சர் வர மாட்டார் என அண்ணாமலை குற்றச்சாட்டு
குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தன ஆட்சி, ஜாதி வைத்து ஆட்சி இவை நான்கையும் வெளியேற்ற வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலசப்பாக்கத்தில் நடைபாதை என யாத்திரையும் மேற்கொண்டார்
கலசப்பாக்கம் தொகுதியில் வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களால் மிகுந்து வரவேற்பளிக்கப்பட்டது.
யாத்திரை முடித்து பேசுகையில்,
குடும்ப ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஊழல் ஆட்சியை வெளியேற்ற வேண்டும், அடாவடித்தன ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஜாதி வைத்த ஆட்சி செய்வதை வெளியேற்ற வேண்டும், இவை நான்கையும் வரும் தேர்தலில் வெளியேற்ற வேண்டும் என பேசினார்.
தமிழக முதல்வர் திருவண்ணாமலைக்கு 31 மாதங்களில் இரண்டு முறை வந்துள்ளார், முதல் முறை வந்தது எதற்காக என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி திறந்து வைப்பதற்கு, இரண்டாவது முறை எதற்கு வந்தார் என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு வந்தார். ஏழை மக்களுக்கு நன்மை தரும் நல்ல திட்டங்களை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் வரமாட்டார்.
தமிழகத்தில் கல்விநிலை சரியில்லை பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது, பாஜக வெற்றி பெற்றால் முதல் வேலை பட்டி தொட்டி எல்லாம் மத்திய அரசின் உயர்தர கல்வியை தருவது.
ஜவ்வாது மலையில் ST மக்களுக்கு தனி பள்ளிக்கூடம் அமைத்து தருவது முதல் வேலை என கலசப்பாக்கத்தில் அண்ணாமலை பேசினார்.
எ.வ.வேலு பெயர் உண்மையிலேயே திமுகவின் ஏ.டி.எம் வேலு, திமுகவிற்கு ஏடிஎம் இருக்கிறது என்றால் அது எ.வ.வேலு. மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஐம்பதாயிரம் கோடி, அறுபதாயிரம் கோடி என கொள்ளை அடித்து வைத்துள்ளார். அவர் என்ன தொழில் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அண்ணாமலை பேசினார்.
பெருங்கோட்ட பொறுப்பாளர் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் என் மண் என் மக்கள் யாத்திரை பொறுப்பாளர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், தொகுதி பொறுப்பாளர் எஸ் பி கே சுப்பிரமணியன், தொகுதி அமைப்பாளர் கவுன்சிலர் ரமேஷ், தொகுதி இணை அமைப்பாளர் கவிதா, முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, மாவட்ட செயலாளர் பாலாஜி, தலைவர்கள் ஐயப்பன், ரமேஷ், குமார், வெங்கடேசன், செல்வராஜ், அமுதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என் மன் என் மக்கள் யாத்திரையில் வரலாறு காணாத வகையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







Comments
Post a Comment