பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையினை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு 2022-23ம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளர் அமரவாணி வரவேற்று பேசினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஆவின் மேலாளர்கள் சுகன்யா (பால் உற்பத்தி), காளியப்பன்(பால் சேகரிப்பு குழு), அட்மா குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்கள் 734 பேருக்கு மொத்தம் ரூ 8 லட்சத்து ஒரு ஆயிரம் ஊக்கத்தொகைகளை வழங்கியும், சிறந்த முறையில் பால் ஊற்றியதற்கு பாராட்டியும், மேன்மேலும் பால் உற்பத்தியை பெருக்குவதால் அனைவருக்கும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வழி வகுக்கும் எனக் கூறிய துணை சபாநாயகர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் சங்க தனி அலுவலரும் செயலாட்சியரான தமிழரசி, விரிவாக்க அலுவலர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிபாலன்,
ஆராஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசேகர், கிளை செயலாளர்கள் ஏழுமலை, சுதாகர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தமிழ்செல்வன், சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.





Comments
Post a Comment