பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை முன்னிட்டு அருணாச்சலம் மகா அன்னதான மடத்தில் ராமர் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கோலாகலம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராம் லல்லா என்ற இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஐந்து வயது பால ராமர் சிலையின் பிராணப் பிரதிஷ்டை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 11 நாள் விரதம் இருந்து பயபக்தியுடன் பிராணப் பிரதிஷ்டையில் பங்கேற்று பூஜை செய்து தீபாராதனை காட்டி சாஷ்டாங்கமாக வணங்கி வழிபட்டார்.
அயோத்தி நகரம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் கோலாகலமாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள சந்திர லிங்கம் அருகில் உள்ள அருணாச்சலம் மகா அன்னதான மடத்தில் அருணாச்சலம் அடியார்கள் ஏற்பாட்டில் ராமர் கொடி ஏற்றப்பட்டு ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் என்ற கோஷம் விண்ணை பிளக்க சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தீபாராதனை காட்டி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கிராம திருக்கோவில் திருப்பணிக்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பாஜக ஆன்மீக பிரிவு முன்னாள் தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் போது ஆஞ்சநேயர் கொடி ஏற்றப்பட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பிய படி சிறப்பு வழிபாடு நடைபெற்றது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
கிரிவலப் பாதையில் தூய்மை பணி மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டது.



Comments
Post a Comment