பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டையை 1000 விளக்கு ஏற்றி மகாயாக குண்டம் வைத்து தீபாவளி போல் கொண்டாடிய மாவட்ட பட்டியலணி தலைவர் விஜயராஜ்
அயோத்தியில் ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு திருவண்ணாமலை பல்லவன் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ராமபிரானின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை வைத்து பூஜை செய்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திருவுருவப்படத்தையும் வைத்து மிகப்பெரிய யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
மகா யாக வேள்வி பூஜை ஆனது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் அவரது ஏற்பாட்டில் இல்லத்தின் அருகே நடைபெற்றது.
சித்தர்களின் மகா யாக குண்டத்தில் கொல்லிமலை சித்தர் பிரேம் சாய் பாபா முன்னிலையில் 108 திரவியங்கள், ஹோம குச்சிகள், மூலிகைகள், பஞ்சாமிர்தம், பால், தயிர், வெண்ணெய், இளநீர், பூ, பொறி, சந்தனம் உள்ளிட்டவை மகாயாக குண்டத்தில் போட்டு சிறப்பான முறையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்த மகாயாகத்தில் சாதுக்கள், சன்னியாசிகள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யாக குண்டத்தை சுற்றி வந்து வேண்டி வணங்கி வழிபட்டனர்.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகா யாகம் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு ஆறு மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி போல் ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.





Comments
Post a Comment