47வது அகில இந்திய கராத்தே போட்டிகள், ஷீகான் சரவணன் தலைமையில் பயிற்சி பெற்ற சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தல்
வேலூர் நாதன் மஹால் திருமண மண்டபத்தில் 47வது அகில இந்திய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இந்திய தலைவர் கியோஷி ரமேஷ் பாபு அவர்கள் தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தியா முழுவதும் இருந்து அனைத்து மாநில கராத்தே வீரர்களும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கராத்தே பயிற்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் என 2500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் இந்த கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி மாணவர்கள் 35க்கும் மேற்பட்டோர் கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.
போட்டிகளின் முடிவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் முதல் பரிசு 18 பேர் , இரண்டாம் பரிசு 11 பேர் மற்றும் மூன்றாம் பரிசு 6 பேர் பெற்றனர். வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியின் தலைமை பயிற்சியாளரும், திருவண்ணாமலை மாவட்ட கராத்தே டோ சங்கம் மாவட்ட செயலாளர் ஷீகான் சரவணன் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கு.ராஜசேகர் ஆகியோர் கராத்தே மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து கராத்தே போட்டிகளில் வெற்றி பெற செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment