அயோத்தியில் ஸ்ரீ பாலராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 11 நாள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி சாஷ்டாங்கமாக வணங்கி பிராணப் பிரதிஷ்டை ஆனது சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனை உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பாலராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், ராந்தம் கிராமத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி உடனுறை ராதா ருக்மணி ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் ஏற்பாட்டில் ஆன்மீக பாடல்கள் பஜனை மற்றும் சொற்பொழிவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இசைக்குழுவினர் ராமர் பற்றிய சுவாரஸ்யமான வரலாறு மற்றும் இடையிடையே ராமர் பாடல்களை மனமுருக பாடி பக்தர்களை பரவசமூட்டினர்.
பின்னர் வேணுகோபால சுவாமிக்கு தாலாட்டு பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு சுண்டல், பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் தொடர்ந்து ஆன்மீக நிகழ்ச்சிகளை திறம்பட செய்து வருவதாக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ராமர் புகைப்படம் பூஜை செய்து ஐந்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை தங்கள் வீடுகளில் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். அட்சதையை வைத்து கோயில் சுவாமி முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி ஊர் மக்கள் அனைவரும் வணங்கினர். அனைவரது வீடுகளிலும் ஆன்மீக ராமர் பஜனை மற்றும் பாடல்களை ஆங்காங்கே அமர்ந்தபடி கேட்டு பக்தி பரவசமடைந்தனர் என்றால் அது மிகை ஆகாது.





Comments
Post a Comment