திருவண்ணாமலை வேங்கிக்கால் மிலிட்டரி ஹோட்டல் எதிரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பாக இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
திருவண்ணாமலை அனைத்து மாவட்ட அசோசியேஷன் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டு ஈ.சி.ஹெச்.எஸ் மருத்துவமனையில் நடக்கும் குளறுபடிகளை சரி செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் தலைவர்கள் மூலம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஸ்டேஷன் ஹெட் குவாட்டர் கமாண்டர் மற்றும் சென்னை ஜெனரல் ஆபிஸர் கமாண்டிங் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைவர் பி.கருணாநிதி, துணைத்தலைவர் அந்துராஜ் மற்றும் மாவட்ட தாலுகா சங்கத் தலைவர் பலரும் உரையாற்றினார். கேப்டன் உசேன், கேப்டன் ரவி, கேப்டன் பலராமன், கேப்டன் குப்புசாமி கவுண்டர், அவுல்தார் அருள்தாஸ், சுபேதார் மேஜர் சேட்டு, சுபேதார் பாபு, சகாதேவன், பெஞ்சமின், காந்தி, வேலு, தமிழரசன், கேப்டன் கிறிஸ்துராஜ், செந்தில்குமார் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை காந்திநகரில் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் மருத்துவமனையில் நடைபெறும் குளறுபடிகள் சரி செய்வதற்கான உறுப்பினர்களின் அவசர தீர்மானத்தோடு கூட்டம் நிறைவு பெற்றது. மதிய உணவும் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பாடு செய்து பரிமாறப்பட்டது.





Comments
Post a Comment