சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி மாபெரும் பேரணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை காந்தி சிலை அருகே திருவண்ணாமலை மாவட்ட அனைத்து நாயுடுகள் சங்கம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குணசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் மாவீரர் கட்டபொம்மன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணி அண்ணா சிலை பெரியார் சிலை வழியாக சின்ன கடை தெருவில் உள்ள நாயுடு மகாலில் முடிவடைந்தது. நாயுடு மகாலில் நடந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில மாவட்ட மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment