Skip to main content

Posts

Showing posts from November, 2021

அண்ணாமலையார் திருக்கோயிலில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம்

 திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 3 நாள் பயிற்சி பேரியக்கம் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்ற திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். முன்னதாக காலை 7 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாலை அணிவித்து ஆசீர்வதித்தனர். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபோது மாவட்ட தலைவர் ஜீவானந்தம், பொருளாளர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ், ரமேஷ், சேகர், மாவட்டச் செயலாளர் சிவசங்கரன்,  ஓபிசி அணி மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், நகர தலைவர் திருமாறன், ஓபிசி அணி நகர தலைவர் ஸ்ரீதர்,ஓபிசி அணி மாவட்ட செயலாளர் செந்தில்வேல் உள்ளிட்ட பாஜகவினர் உடனிருந்த...

50 பயனாளிகளுக்கு பிரதமர் இலவச உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்கிய பாஜக மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ராஜ தமயந்தி

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் பாரதப்பிரதமர் இலவச  உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள கௌதம் எச்பி கேஸ் ஏஜென்சி அருகில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் பாரதப்பிரதமர் இலவச  உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலவச உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர்,  அடுப்பு, ரெகுலேட்டர் உள்ளிட்டவற்றை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் ராஜதமயந்தி தலைமையில் மொத்தம் 50 பயனாளிகளுக்கு வழங்கினார். வடக்கு ஒன்றிய மகளிரணித் தலைவர் அலமேலு, ஒன்றிய செயலாளர் தேவகி, தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய மகளிர் அணி  தலைவர் ராஜலட்சுமி முன்னிலையில் கேஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.ஆர்.விஜய் , மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பி.மூவேந்தன், செந்தில்வேல், மாவட்ட தமிழ் வளர்ச்சிப் பிரிவு செயலாளர் எஸ...

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.   மாநில இளைஞரணி துணைத்தலைவர் அரசு ரங்கேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சதீஷ், சேகர், அமைப்புச் செயலாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன்,  திருவண்ணாமலை நகர தலைவர் திருமாறன் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தினார் , ஓபிசி அணி மாவட்ட செயலாளர் S.செந்தில்வேல், ஓபிசி அணி நகர தலைவர் R.ஸ்ரீதர், J.சரவணன், R.விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் கவிதா, மாவட்டச் செயலாளர் பானு நிவேதிதா,  மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ராஜதமயந்தி, பொதுச் செயலாளர் சந்திரா, மாவட்ட மகளிரணி பொருளாளர் மாலதி, மகளிர் அணி ஒன்றிய தலைவர்கள் ராஜலட்சுமி, அலமேலு, சந்திரகலா,  மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர்.ராஜா ஹரி கோவிந்தன், எஸ்.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர்...

39வது ஆண்டாக ரூ. 1 கோடி மதிப்பில், 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி கண் பரிசோதனை முகாம் நடத்திய திருவண்ணாமலை சாரிட்டபிள் டிரஸ்ட் கோவில்பட்டி மற்றும் அகரம் புதிய சகாப்தம் லயன்ஸ் கிளப்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப விழா அன்னம் பாலிப்பு திருப்பணி குழுவின் சார்பில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 39வது ஆண்டாக  ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சம் அன்பர்களுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று வீடு வீடாக அன்னதானம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள ஜெயலட்சுமி அம்மாள் ஜெயராம கவுண்டர் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233வது பட்டம் திருச்சிற்றம்பல தேசிக ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாசபரமாசாரிய சுவாமிகள் தலைமையில்,  அகரம் புதிய சகாப்தம் லயன்ஸ் கிளப் மற்றும் சைட் கேர் பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் கண்ணாடியும் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 30,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை திருக்கார்த்திக...

ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் மற்றும் வாக்காளர் சிறப்பு சேர்த்தல் முகாம்

 திருவண்ணாமலை மாவட்டம் கொத்தந்தவாடி ஊராட்சியில் கொரோனா தடுப்பு ஊசி முகாம், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தடுப்பூசி முகாமில் கிராம சுகாதார செவிலியர் முனியம்மாள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். தடுப்பு ஊசி செலுத்தி பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் செவிலியர் முனியம்மாள் அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரதமரின் வாழ்த்து அட்டை வழங்கி கௌரவித்தார்.    ஆசிரியர் சாந்தி, செல்வகுமாரி AWW, ரீட்டா அருள்மொழி AWW , பாண்டியன் DPH, முருகன் DPH, அங்கன்வாடி பணியாளர்கள் , சத்துணவு அமைப்பாளர்,  ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினர். வாக்காளர் சிறப்பு சேர்த்தல், திருத்தல், நீக்கல் முகாம்   தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொத்தந்தவாடி ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கரோனா நோயினை அறவே ஒழித்து முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவதே எனது தலையாய க...

தொழில் அங்கீகாரம், இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை வழங்க வேண்டும், BMS திருமண அமைப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

 தொழில் அங்கீகாரம், இலவச பஸ் பாஸ், பென்ஷன் உள்ளிட்டவை வழங்க வேண்டும், திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற BMS திருமண அமைப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை. திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் BMS தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் ராம ராஜசேகர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாநிலத் தலைவர் செங்கம் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ், மாநில பொருளாளர் சக்தி ராணி, மாநிலச் செயலாளர்கள் சாந்தி, ராமலட்சுமி, மாநிலத் துணைத் தலைவர்கள் சுசிலா தேவி, ஆறுமுகம், அருண்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழகம் முழுவதுமிருந்து கலந்து கொண்டனர். இறுதியாக திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மூர்த்தி நன்றி உரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து...

செவரபூண்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு ஊசி முகாம்

 செவரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னகண்ணு தலைமையில் நடைபெற்றது.  முகாமில் செவிலியர் நாகராணி , ஊராட்சி செயலாளர் ஏழுமலை, தலைமையாசிரியர் சுடர்விழி, உதவி ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ராணி BLO, பணித்தள பொறுப்பாளர் சங்கீதா, உமா, சோலையம்மாள், சரளா,  அங்கன்வாடி பணியாளர்கள் ஆபிதா, தமிழரசி , சத்துணவு அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினர். வாக்காளர் சிறப்பு சேர்த்தல், திருத்தல், நீக்கல் முகாம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் சின்னகண்ணு, ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

 தீபாவளி பட்டாசு, இனிப்புகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் P.மோகன்  அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஊராட்சி பணியாளர்கள். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்கள் தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர், வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் P.மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுசீலாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உஷாராணி, நாராயணன், மணி, சின்ன ...

டாக்டர். ராஜா ஹரி கோவிந்தன் ஒரு விரலால் காரில் கயிற்றைக் கட்டி இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை.

ஒரு விரலால் 2,200 கிலோ எடைகொண்ட காரை இழுத்து தீபமலை குழு நிறுவனர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் விழிப்புணர்வு  இந்திய அரசு நேரு யுவகேந்திரா திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தீப மலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து தூய்மை பாரதம் பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியாக ஒரு விரலில் பற்களைக் கொண்டு 2,200 கிலோ எடைகொண்ட காரை இழுத்து தீபமலை குழுவின் நிறுவனர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் யமுனா ஹரி கோவிந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராம்சந்தரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருபாநிதி அவர்கள் உலக சாதனை நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி,  நாகராஜ் சுவாமிகள், சாந்தி அம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்கள் ஒரு விரலால் காரில் கயிற்றைக் கட்டி இழுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உலக...

100 தொழுநோயாளிகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சமூக சேவகர் மணிமாறன்

 திருவண்ணாமலை அருகே 100 தொழுநோயாளிகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சமூக சேவகர் மணிமாறன் திருவண்ணாமலை மாவட்டம்  தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பா.மணிமாறன் சமூக சேவகர் . இவர்   உலக மக்கள் சேவை மையம்  என்ற தொண்டு நிறுவனம் தொடங்கி கடந்த 19 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வருகிறார்.   தமிழகம் முழுவதும்  தொழுநோயால் பாதிக்கப்பட்டு சாலையோரம் தங்கியிருக்கும்  மக்களுக்கு  சேவை செய்து வருகிறார் . இவர் தீபாவளியை முன்னிட்டு திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடியில் செயல்பட்டு வரும் அரசு  தொழுநோயாளிகள் மறுவாழ்வு  இல்லத்தில் தங்கியிருக்கும்  100 தொழுநோயாளிகளுக்கு புடவை,  வேட்டி  ,போர்வை  மற்றும் ‌பழம் , பிஸ்கட் உணவு  உள்ளிட்டவை வழங்கினார். அப்போது உலக மக்கள் சேவை மையம் செயலாளர் லோகநாதன் உடனிருந்தார் . சமூக சேவகர் மணிமாறன் இதுவரையில்  காவல்துறை அனுமதி பெற்று  தமிழகம் முழுவதும் 1438 ஆதவரற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.  இதுகுறித்து சமூக சேவகர் மணிமாறன் கூறும்போது,கரோனா தொற்று காலத்திலும்  தமிழ...

பிரதமர் பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கொண்டாடிய மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ரமேஷ்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா, பாஜக கொடியேற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என முப்பெரும் விழாவாக பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமையில் கொண்டாட்டம். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம், உண்ணாமலைபாளையம் கிராமத்தில் பாரத பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. பாஜக கொடியேற்று விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உண்ணாமலைபாளையம் கிராமம், புதூர்செங்கம் கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவை ஒன்றிய குழு உறுப்பினரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருமான K.ரமேஷ் அவர்களால் பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டு முப்பெரும் விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  விழாவின் சிறப்பு அழைப்பாளராக கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி,OBC அணி மாவட்ட துணை தலைவர் ஜெயராஜ...