திருவண்ணாமலை அருகே 100 தொழுநோயாளிகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சமூக சேவகர் மணிமாறன்
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பா.மணிமாறன் சமூக சேவகர் . இவர் உலக மக்கள் சேவை மையம் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கி கடந்த 19 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வருகிறார்.
தமிழகம் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு சாலையோரம் தங்கியிருக்கும் மக்களுக்கு சேவை செய்து வருகிறார் . இவர் தீபாவளியை முன்னிட்டு திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடியில் செயல்பட்டு வரும் அரசு தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்கும் 100 தொழுநோயாளிகளுக்கு புடவை, வேட்டி ,போர்வை மற்றும் பழம் , பிஸ்கட் உணவு உள்ளிட்டவை வழங்கினார்.
அப்போது உலக மக்கள் சேவை மையம் செயலாளர் லோகநாதன் உடனிருந்தார் . சமூக சேவகர் மணிமாறன் இதுவரையில் காவல்துறை அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் 1438 ஆதவரற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து சமூக சேவகர் மணிமாறன் கூறும்போது,கரோனா தொற்று காலத்திலும் தமிழகம் முழுவதும் சென்று ஆதரவற்றோர்களின் உடல்களை பெற்று முறைப்படி நல்லடக்கம் செய்து வருகிறேன்.நான் இதில் மதம் ,ஜாதி பாகுபாடு பார்ப்பதில்லை. பெற்றோர்களை யாரும் ஆதரவற்ற நிலைக்கு தள்ள கூடாது .அவர்களுக்கு கடைசி காலத்தில் உதவியாக இருக்க வேண்டும் என்றார்.
Comments
Post a Comment