திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 3 நாள் பயிற்சி பேரியக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்ற திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.
முன்னதாக காலை 7 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாலை அணிவித்து ஆசீர்வதித்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபோது மாவட்ட தலைவர் ஜீவானந்தம், பொருளாளர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ், ரமேஷ், சேகர், மாவட்டச் செயலாளர் சிவசங்கரன்,
ஓபிசி அணி மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், நகர தலைவர் திருமாறன், ஓபிசி அணி நகர தலைவர் ஸ்ரீதர்,ஓபிசி அணி மாவட்ட செயலாளர் செந்தில்வேல் உள்ளிட்ட பாஜகவினர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment