டாக்டர். ராஜா ஹரி கோவிந்தன் ஒரு விரலால் காரில் கயிற்றைக் கட்டி இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை.
ஒரு விரலால் 2,200 கிலோ எடைகொண்ட காரை இழுத்து தீபமலை குழு நிறுவனர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் விழிப்புணர்வு
இந்திய அரசு நேரு யுவகேந்திரா திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தீப மலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து தூய்மை பாரதம் பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியாக ஒரு விரலில் பற்களைக் கொண்டு 2,200 கிலோ எடைகொண்ட காரை இழுத்து தீபமலை குழுவின் நிறுவனர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் யமுனா ஹரி கோவிந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராம்சந்தரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் கிருபாநிதி அவர்கள் உலக சாதனை நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி, நாகராஜ் சுவாமிகள், சாந்தி அம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்கள் ஒரு விரலால் காரில் கயிற்றைக் கட்டி இழுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உலக சாதனை செய்தார்.
இறுதியாக யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கத்தின் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment