ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் மற்றும் வாக்காளர் சிறப்பு சேர்த்தல் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கொத்தந்தவாடி ஊராட்சியில் கொரோனா தடுப்பு ஊசி முகாம், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தடுப்பூசி முகாமில் கிராம சுகாதார செவிலியர் முனியம்மாள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். தடுப்பு ஊசி செலுத்தி பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் செவிலியர் முனியம்மாள் அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரதமரின் வாழ்த்து அட்டை வழங்கி கௌரவித்தார்.
ஆசிரியர் சாந்தி, செல்வகுமாரி AWW, ரீட்டா அருள்மொழி AWW , பாண்டியன் DPH, முருகன் DPH, அங்கன்வாடி பணியாளர்கள் , சத்துணவு அமைப்பாளர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினர்.
வாக்காளர் சிறப்பு சேர்த்தல், திருத்தல், நீக்கல் முகாம் தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொத்தந்தவாடி ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கரோனா நோயினை அறவே ஒழித்து முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவதே எனது தலையாய கடமை என ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் தெரிவித்தார்.
Comments
Post a Comment